இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
இஸ்கான் தேர் பவனி.
திருநின்றவூர் அருகே நடைபெற்ற இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரையில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நாமத்தை பாடி வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ( இஸ்கான்) சார்பில் ஆண்டுதோறும் ஸ்ரீ ஸ்ரீ கவுர நிதாய் ரத யாத்திரை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு வடசென்னை இஸ்கான் அமைப்பு சார்பில் திருநின்றவூரில் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளை எடுத்துரைக்கும் வகையில் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடைபெற்றது.. திருநின்றவூர் சிடிஎச் துவங்கி பிரதான சாலை மேம்பாலம் வழியாக கோமதிபுரம் இஸ்கான் கோவிலை சென்றடைந்தது.
முன்னதாக திருநின்றவூர் நகர மன்ற தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்த ரத யாத்திரையில் ரத்தத்தை பக்தர்கள், சிறுவர் சிறுமியர் என 500க்கும் மேற்பட்டோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அதோடு ஹரே கிருஷ்ணா, ஹரே ராம புனித நாமத்தை பாடிக்கொண்டும் நடனமாடியும் மகிழ்ச்சியுடன் வழிப்பட்டனர்.
இந்த ரதத்தில் 11.5அடி விரிவும், 12 அடி உயரமாக முழுவதும் திறக்கும் போது 25 அடியாக மேலே உள்ள கலசமும் கொடியுமாக ஹைட்ராலிக் விதானம் வெளிப்படும் வகையில் புதிய ரதம் அர்ப்பணிக்கப்பட்டது. ரதம் இலக்கை அடைந்தப்பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu