ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை!
X
ஆவடி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆவடி அருகே கணவன் மனைவி இருவர்,தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், ( வயது 40) இவர் காய்கறி மார்க்கெட்டில் பளுதூக்கும் தொழிலாளி. இப்ப இவருக்கு திருமணம் ஆகி மனைவி சத்யா, ( வயது 36). இதம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகன் மற்றும் 14 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரகாஷ் வழக்கம் போல் நேற்று வேலை முடித்துவிட்டு மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்தபோது, சத்தியா, நீங்கள் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது எனக்குத் தெரியும்' என்று பிரகாஷிடம் கூறியதால் , இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த சத்யா, படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் தனது மகனுக்கு தொலைபேசி வாயிலாக தனது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்து பின் சமையல் அறையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடனே

தொலைபேசி வாயிலாக பிரகாஷின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

ஆவடி காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!