அம்பத்தூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

அம்பத்தூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
X
அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தில் பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமுல்லைவாயில் மணிகண்டபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் காஞ்சனா. இவரது மகள் ஜெயஸ்ரீ. இவர்கள் இருவரும் சம்பவத்தன்று பைக்கில் கொளத்தூரில் சாரதி நகரில் வசித்து வரும் தனது தம்பி வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் நேற்று இரவு அங்கிருந்து இருவரும் வீட்டிற்கு திரும்பினார். அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர் திடீரென வழிமறித்தனர். பின்னர் காஞ்சனா அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். தாயும் மகளும் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!