விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி ஆவடியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்

விஜயகாந்த்  பிறந்த நாளையொட்டி ஆவடியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்
X

விஜயகாந்த் பைல் படம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி ஆவடியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மாநிலம் முழுவதும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஆவடி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடி மாநகர் மாவட்ட செயலாளர் ஆவடி சங்கர் கலந்துகொண்டு தேமுதிக கொடியினை ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து ஆவடி மாநகராட்சி அருகே பொதுமக்கள் 600க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர், மாவட்ட துணை செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!