First Mayor and Deputy Mayor to Avadi Corporation elected-ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
![First Mayor and Deputy Mayor to Avadi Corporation elected-ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் First Mayor and Deputy Mayor to Avadi Corporation elected-ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்](https://www.nativenews.in/h-upload/2022/03/05/1490992-screenshot2022-03-05-08-38-56-72.webp)
ஆவடி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்தித்து ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த ஜி.உதயகுமார். தேர்ந்தெடுக்கப்பட்டார்
உதயகுமார் திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் 9.வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். .10ம் வகுப்பு படித்துள்ளார். திருமுல்லைவாயில் காலனி, திருவள்ளுவர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவரது தந்தை. குணசேகரன் ஓய்வுபெற்ற பாதுகாப்பு துறை ஊழியர் ஆவார்.
உதயகுமாருக்கு திருமணமாகி மனைவி வினாயகி(28) என்ற மனைவியும். ஜெய் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர் . மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த உதயகுமாரை, ஆவடி மாநகராட்சி முதல் மேயராக அறிவித்துள்ளதை அடுத்து கட்சியினர் பெருமை அடைந்துள்ளனர்.
மேயர் உதயகுமார் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்சா.மு.நாசரை உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆவடி மாநகராட்சியின் துணை மேயராக மதிமுக கட்சியை சேர்ந்த எஸ்.சூரியகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சியில், 23வது வார்டு கவுன்சிலராக எஸ்.சூரியகுமார் , மதிமுக மாநகர செயலாளராக பணியாற்றி வருகிறார். சூரியகுமாரின் மனைவி பார்வதி). இவர்களது மகன் விஷ்ணுவரதன் (13).
இவர், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மதிமுக தேர்தல் பணி செயலாளர் வக்கீல் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu