திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பு அணிகளுக்கான விண்ணப்பம் விநியோகம்

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக   சார்பு அணிகளுக்கான விண்ணப்பம் விநியோகம்
X

திருவள்ளூர் மத்திய திமுக  மாவட்ட செயலாளர் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கட்சினருக்கு விண்ணப்ப படிவம் வழங்கினார்

திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கட்சினருக்கு விண்ணப்ப படிவம் வழங்கினார்

திருவள்ளூர் மத்திய மாவட்ட திராவிடமுன்னேற்றக் கழகத்தில் சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி.

இலக்கிய அணி. கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை. ஆதிதிராவிடர் நலக்குழு அணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அணி, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி. மீனவர் அணி. மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி. சுற்றுச்சூழல் அணி, அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி, அயலக அணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி ஆவடி ரயில் நிலைய அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று கட்சியினருக்கு விண்ணப்ப படிவம் வழங்கினார் .

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் க.பிரபு, மாணவர் அணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாநகர கழகச் செயலாளர் ஆவடி சாமு.நா.ஆசிம்ராஜா, ஆவடி மேயர் ஜி.உதயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் ம.இராஜி, வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், பா.நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், எம்.முத்துதமிழ்செல்வன், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர் பகுதி செயலாளர்கள் ஆவடி ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் என்.இ.கே.மூர்த்தி, ப.ச.கமலேஷ், ஜி.ஆர்.திருமலை, சே.பிரேம் ஆனந்த், தி.வே.முனுசாமி, தங்கம் முரளி, உள்பட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்கள்




Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது