சேக்காடு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று ஏற்படும் அபாயம்
சேக்காடு ஏரியில் செத்து மிதந்த மீன்களை குழியில் போட்டு புதைக்கப்பட்டன.
ஆவடி அருகே சேக்காடு ஏரியில் 6 டன் அளவிலான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் பொது பணித்துறைக்கு சொந்தமான சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியை மீன் வளர்ப்பதற்காக ரமேஷ், என்பவர் குத்தகைக்கு எடுத்து ரோகு, கட்லா, ஏரி வவ்வால், ஜிலேபி உள்ளிட்ட நாட்டு மீன் களை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் வழக்கம்போல குத்தகைதாரர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது குவியல் குவியலாக தண்ணீரில் மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. பின்னர் குத்தகைதாரர்கள் ஏரியில் இறங்கி செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் குத்தகைதாரர்களே ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் ஏரியில் செத்து மிதந்த சுமார் 6 டன் அளவிலான மீன்களை 10 அடி பள்ளம் தோண்டி மீன்களை பள்ளத்தில் போட்டு மூடி உள்ளனர். மேலும் அதிலுள்ள மீதமுள்ள மீன்களும் தற்போது செத்து மிதந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரி அருகிலுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சட்டவிரோதமாக ஏரியில் கழிவு நீரை திறந்து விட்டதால் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் தற்போது செத்து மிதப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக ஏரியில் கலக்கப்பட்ட கழிவு நீரை கனரக மோட்டார்களை வைத்து வெளியேற்றி ஏரியை முறையாக சுத்தம் செய்து, மீண்டும் கழிவு நீர் ஏரிக்குள் வராதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu