அதிக விலைக்கு பால் விற்பதை தடுக்க பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்!
பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி
பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த பிறகும், தமிழகம் முழுவதும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்பனை செய்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏனெனில் ஆவின் நிறுவனத்தில் கடந்த கால அதிமுக அரசு சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் "C/F ஏஜென்ட்" மூலம் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மற்றும் மொத்த வினியோகஸ்தர்கள் என்கின்ற இடைத்தரகர்கள் முறையில் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக வசதியாக, தமிழகம் முழுவதும் பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனத்தோடு நேரடி வர்த்தகத் தொடர்புகளை கொடுக்காமல் தவிர்த்து வந்ததோடு, ஒவ்வொரு ஒன்றியங்களிலும் ஆவின் பால் விற்பனைக்காக கமிஷன் தொகையை ஒவ்வொரு வகையில் அதுவும் சொற்ப அளவில் தான் வந்துள்ளது.
பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் ஆவின் பால் விற்பனை கமிஷனாக லிட்டர் ஒன்றுக்கு வெறும் 1 ரூபாய் முதல் 1 ரூபாய் 50 பைசா வரை மட்டுமே கிடைத்ததால் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதிலும் சில இடங்களில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே பால் முகவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் காரணமாக ஆவின் பால் தமிழகம் முழுவதும் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யப்படுவதற்கு பிரதான காரணமாகி விடுகிறது.
சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மற்றும் மொத்த வினியோகஸ்தர்கள் என்கின்ற இடைத்தரகர்கள் முறையை முற்றிலுமாக ஒழித்து, பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளையும், ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாகவும் வழங்கினால் மட்டுமே ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், ஆவின் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
எனவே பால்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அதனை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu