திருவேற்காடு நகராட்சி சார்பில் இலவச கொரோனா பரிசோதனை முகாம்

திருவேற்காடு கோலடி ரோடு பகுதியில், நகராட்சி சார்பில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகளவில் உள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி, திருவேற்காடு கோலடி ரோடு பகுதியில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது; மற்றும் கொரோனை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சளி, இருமல், காய்ச்சல் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என நகராட்சி சார்பில் கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு