ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட கூலி தொழிலாளி உயிரிழப்பு

ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட கூலி தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட கூலித் தொழிலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அணில்குல் ஷேக்(52), என்பவர் தங்கி தங்கியிருந்து கட்டிட கூலி தொழிலை பார்த்து வருகிறார்.

இவர் வேலை செய்யும் கட்டிடம் அருகே உள்ள குடிசை வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு தரையில் அறுந்து கிடந்த மின் வயரை கவனிக்காமல் மிதித்தாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு படுகாயமடைந்தார். இதனை கவனித்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்க்க கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷேக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் அங்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்சது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!