பெண் போலீசிடம் செயின் பறிப்பு: கீழே விழுந்து படுகாயம்

ஆவடி ஐ.சி.எப் பகுதியில் பெண் காவலரிடம் மர்ம நபர் செயின் பறித்து சென்றார். இதில், பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது.

செம்பியம் காவல் நிலையத்தில், பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் ரேகா. இவர், பணியை முடித்துவிட்டு ஆவடி பருத்திப்பட்டில் உள்ள தனது தங்கையை பார்ப்பதற்காக சென்றார்.

இருசக்கர வாகனத்தில், ஆவடி ஐ.சி.எப். பகுதி வழியாக பெண் காவலர் ரேகா சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ரேகாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றனர்.

இந்த செயின் பறிப்பின்போது தடுமாறி கீழே விழுந்து பெண் காவலர் ரேகாவின் முகம், கைகால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ரேகா அளித்த புகாரின் பேரில் ஐ.சி.எப் போலீசார் மற்றும் செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு