ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு

ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
X
ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கொள்ளுமேடு, சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (37). இவருக்கு ஆவடி - கோவில்பதாகை முக்கிய சாலையில் சொந்தமாக செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நாகராஜ் நேற்று முன்தினம் நாகராஜ் கடையை சென்று தன் பணிகளை முடித்துக் கொண்டு, இரவு கடையை பூட்டிவிட்டு ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டார்.

நேற்று காலை, அவரது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த கடையின் உரிமையாளர் திருநாவுக்கரசு நாகராஜுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அவர் கடைக்கு விரைந்து வந்து சோதனை செய்தார். அப்போது, அங்கு இருந்த 7 செல்போன்கள், ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. நகராஜ், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!