கள்ளிக்குப்பம் பகுதியில் வீட்டை உடைத்து 15 சவரன் நகைக்கொள்ளை

Theni News Today | Robbery Case
X
கள்ளிக்குப்பம் பகுதியில் கோவில் விழாவுக்கு சென்றிருந்தவர் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை, அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கொரட்டூரில் உள்ள ஆட்டோமொபைல் கம்பெனியின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சௌமியா பிரியா இவர்களுக்கு ஸ்வேதா, சாதனா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதற்கிடையில் சிவகுமார் வீட்டை பூட்டிவிட்டு மனைவி மகளுடன் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர்.

இந்நிலையில், இன்று சிவகுமாரின் தம்பி ஆனந்த்பாபு வீட்டை பார்க்க வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இது குறித்து அவர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் வீட்டை சோதனை செய்யுமாறு ஆனந்த் பாபுவிடம் கூறியுள்ளனர். அப்போது அங்கு வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் ரூ. 5ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வீட்டின் கதவு பீரோ ஆகியவற்றில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளைகளில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு