/* */

பாஜக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு..!

திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய பாஜகவினர் தேவாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீடுகளில் வாக்கு சேகரித்தனர்.

HIGHLIGHTS

பாஜக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு..!
X

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் பொன் வி. பாலகணபதியை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென திருமுல்லை வாயல் பகுதியில் தேவாலயம் மற்றும் அதை சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பாஜக சார்பாக தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பொன் V பாலகணபதியை ஆதரித்து உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவரும் சக்தி கேந்திரா பொறுப்பாளர் எம் டி எஸ் பால்ராஜ் மற்றும் ஆவடி கிழக்கு மாநகர் மண்டல் துணைத் தலைவர் தீபிகா பால்ராஜ் தலைமையில் வாக்கு சேகரித்தனர்.

ஆவடி தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாயில் 7வது வார்டு பகுதியான திருவள்ளுவர் நகர், சிவசங்கபுரம், எஸ் எஸ் நகர், எம்பிஏ சர்ச் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியில் பாஜகவினர் ஒன்றிணைந்து அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் கிறிஸ்டியன் முஸ்லிம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரத பிரதமர் மோடி அவர்களின் பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து மீண்டும் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் அமர, மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று கோஷங்களுடன் வாக்கு சேகரித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பில் பாஜகவின் கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Updated On: 9 April 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு