ஆவடி: கூலிக்கு பனைமரம் ஏறி நுங்கு வெட்டிய பேராசிரியர் தவறி விழுந்து பலி!

ஆவடி: கூலிக்கு பனைமரம் ஏறி நுங்கு வெட்டிய பேராசிரியர் தவறி விழுந்து பலி!
X

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த இறந்த பேராசிரியர்.

ஆவடியில் கூலிக்கு பனைமரம் ஏறி நுங்கு வெட்டிய பேராசிரியர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடபாளையம் நசரத் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் லோகநாதன். அலமாதி கிராமத்தில் வசித்து வந்த லோகநாதன், 2 ஆண்டுகளாக வேலையின்றி வீட்டில் முடங்கி இருந்தார். இவரது மனைவி கவிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவங்களுக்கு இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த லோகநாதன், வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தார். குடும்ப வறுமையின் காரணமாக அவ்வப்போது பனைமரம் ஏறி நுங்கு அறுத்து கொடுத்து அதில் கிடைக்கும் கூலியை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

வழக்கம் போல பனை மரத்தில் ஏறி நுங்கு அறுத்துக் கொடுக்க முயன்றபோது பனை மரத்தின் உச்சியில் இருந்து தவறி விழுந்த லோகநாதன் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊரடங்கு காரணமாக வேலையின்றி பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்ட சென்ற தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயிற்றில் ஒரு குழந்தையையும், கையில் ஒரு குழதையையும் சுமந்து கொண்டிருக்கும் அவரது மனைவிக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!