ஆவடி: கொரோனா தொற்றுக்கு போலீஸ் எஸ்.ஐ. கணவர் பலி!

ஆவடி: கொரோனா தொற்றுக்கு போலீஸ் எஸ்.ஐ. கணவர் பலி!
X
கொரோனா தொற்றுக்கு ஆவடி போலீஸ் உதவி ஆய்வாளரின் கணவர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் பெரம்பலூரில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தனர். இவரது மனைவி மல்லிகா. இவர், ஆவடி போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 21ம் தேதி பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து ஆவடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அதிகாரிகள், ஆவடி பெரியார் நகரில் உள்ள எரிவாயு தகன மேடையில் உறவினர்கள் முன்னிலையில் உடலை தகனம் செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி