ஆவடி: சைக்கிளில் சென்றவரிடம் மொபைல் போன் பறிப்பு: ஈடுபட்ட இருவர் கைது!

ஆவடி: சைக்கிளில் சென்றவரிடம் மொபைல் போன் பறிப்பு: ஈடுபட்ட இருவர் கைது!
X
ஆவடியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த ஆவடி காமராஜர் நகர் ராமலிங்கபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவர் சம்பவத்தன்று இரவு ஆவடி சி.டி.எச் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், திருமுல்லைவாயில் நாகம்மை நகர் திருவள்ளூர் தெருவை சேர்ந்த அஜித் குமார் (23), விக்னேஷ் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொபைல் போன், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்