ஆவடி: மொபிஸ் இந்தியா நிறுவனம் ரூ.1.37 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!
ஆவடி அரசு மருத்துவமனைக்கு மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் 1.37 கோடியில் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் நாசரிடம் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களும், அமைப்புகளும் நிதி உதவியையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், ஹூண்டாயின் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் சார்பில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு ரூ.1கோடியே 37லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், உயிர்காக்கும் கருவிகள், கட்டில் மெத்தை உள்ளிட்ட பெருட்கள் இன்று வழங்கப்பட்டது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம், மொபிஸ் இந்தியா நிறுவனத்தின் மனிதவள துறை தலைவர் பிரேம்சாய், நிதித்துறை தலைவர் செந்தில் ராஜ்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த உபகரணங்களை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பொன்னையா, மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu