ஆவடி: வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆவடி: வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X
ஆவடியில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அண்ணா சிலை அருகே மத்திய அரசு விதித்த 3 அம்சங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்க ஆவடி தொகுதி செயலாளர் ராஜன் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர், சங்க பொதுச்செயலாளர் சண்முகம் கலந்துகொண்டு கண்டன வாசங்களை எழுப்பினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயத்துறையை சீரழித்து கார்ப்பரேட் அவர்களுக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை கைவிட, அதேபோல் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்தை திரும்பப்பெற மற்றும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை குறித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்து! இதுபோல் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்க பொதுச் செயலாளர், மத்திய அரசு உடனடியாக இத்தனை சட்டங்களின் திரும்ப பெறாவிட்டால் பாராளுமன்றத்தின் முன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைக் கொண்டு முற்றுகையிடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூபாலன், சடையப்பன், ராமமூர்த்தி மற்றும் தந்தை பெரியார் இயக்கம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்துக் கழக தோழர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி, பின்னர் கோஷங்களும் எழுப்பினர். கொரோனா காலமென்பதால் சமூக இடைவெளி கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil