ஆவடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு

ஆவடி தேர்தல் அலுவலகத்தில்     தேர்தல் அதிகாரி ஆய்வு
X
ஆவடி தொகுதியில் ஓட்டு இயந்திரத்தில் சின்னங்கள் பதிவு செய்யும் பணியை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரி பொன்னையா ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்காக அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் 618வாக்கு மையம் உள்ளது.

இந்த தொகுதிக்காக மண்டல தேர்தல் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தல் பணிகள் குறித்தும், வாக்கு இயந்திரம் பயன்பாட்டு பயிற்சி நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இன்னும் தேர்தலுக்கு 3நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் பணியில் 3000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆவடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் வாக்கு இயந்திரத்தில் பதிவு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் களப்பணியில் ஆவடி தொகுதியைச் சேர்ந்த மாநகராட்சி, பேரூராட்சி போன்ற ஊழியர்கள் இரவு,பகலாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் தலைமை அதிகாரியும், கலெக்டருமான பொன்னையா தேர்தல் பணியை நேரில் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட்டார். ஒவ்வொரு அறையிலும் வாக்குப்பெட்டி எந்திரங்கள் பாதுகாப்பை அவர் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்தார். பின்னர் ஆவடி தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் இந்த பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!