ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணி!

ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணி!
X

ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் கணக்கொடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவடி மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆவடி மாநகராட்சி சார்பாக பல்வேறு கட்டமாக தடுப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஆவடி மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதில் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை, சளி உள்ளதா? காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!