ஆவடி: மது போதையில் தகராறு: பீர்பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை!

ஆவடி: மது போதையில் தகராறு: பீர்பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை!
X
ஆவடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம், உழைப்பாளர் நகர், 3வது தெரு சார்ந்தவர் பிரசாந்த்குமார் (25). இவர், மின்சார ரயிலில் பாப்கான் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், பிரசாந்த்குமார், தனது நண்பர்கள் நாகராஜ், ராமன் ஆகியோருடன் நெமிலிச்சேரி ஏரிக்கரை ஓரமாக மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்களும் மது அருந்தி உள்ளனர்.

அவர்கள் பிரசாந்த்குமாரிடம், நீங்கள் யார், எங்கள் ஏரியாவில் வந்து, ஏன் மது அருந்துகிறீர்கள் என கேட்டுள்ளனர். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு, அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரசாந்த்குமார், தனது நண்பர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது, அக்கும்பல் இவர்களை பின்னால் பைக்கில் துரத்தி வந்துள்ளனர்.

பிரசாத்குமார் மற்றும் நண்பர்களை காந்திநகர், பாரதமாதா தெருவில் அக்கும்பல் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பிரசாந்த்குமாரை ஓட, ஓட விரட்டி கல்லாலும், பீர் பாட்டிலாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த நாகராஜ், ராமன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த தாக்குதலில் பிரசாந்த்குமார் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து பைக்குகளில் தப்பி சென்று தலைமறைவானார்கள். தகவலறிந்து பட்டாபிராம் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும், விசாரணையில், பிரசாந்த்குமார் கொலை செய்தது, அதே பகுதியை சேர்ந்த அஜித் தலைமையினான நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் 3தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!