ஆவடி: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு விமானப்படையினர் நிவாரணம்!

ஆவடி: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு விமானப்படையினர் நிவாரணம்!
X
ஆவடி விமானப்படையினர் சார்பில் ஏழைகளுக்கு நிவாரண உதவி வழங்கிய காட்சி.
ஆவடியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்திய விமானப்படையின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையை அடுத்த ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அதனடிப்படையில் ஆவடியில் உள்ள விமானப் படையினர் அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை 200க்கு மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆவடி வட்டாட்சியர் செல்வம் மற்றும் விமானப்படை கமாண்டர் பொற்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!