அயப்பாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை : போலீஸ் பணியிடை நீக்கம்

அயப்பாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை : போலீஸ் பணியிடை நீக்கம்
X
தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்.
அயப்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை விவகாரத்தில், போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் ஐயப்பன் நகர், ஓம்சக்தி தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (34) இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

அப்பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்ததாகவும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதால் பாக்கியராஜ் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த பிரதீப் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

சந்தேகத்தின் அடிப்படையில் தலைமை காவலர் சந்தோஷ் எங்களிடம் விசாரித்தார். பின்னர் இருவரின் மொபைல் போனையும் பறித்து காவல்நிலையம் வரும்படி கூறினார்.

ஆத்திரமடைந்த பாக்கியராஜ் அங்கிருந்து பீர் பாட்டிலை உடைத்து, தனது கழுத்தில் வைத்துக்கொண்டு மொபைல்போன தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.

தலைமை காவலர் மொபைல் போனை தர மறுத்ததால் பாக்யராஜ் தற்கொலை செய்து கொண்டார், இவர் அதில் தெரிவித்தார். அதனடிப்படையில் விசாரித்த காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமை காவலர் சந்தோஷை நேற்று பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி பாக்யராஜின் உடல் நேற்று உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!