சமூக விலகலை கடைப்பிடிக்க கூறிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்
X
By - Saikiran, Reporter |16 May 2021 3:30 PM IST
அயப்பாக்கம் ஐயப்ப நகரில் ரேஷன் கடையில் சமூக விலகலை கடைப்பிடிக்க கூறிய திமுக கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார்.
சென்னை அயப்பாக்கம் ஐயப்ப நகரை சேர்ந்தவரை ஸ்ரீதர் (51). இவரது மனைவி ஹேமலதா (45) .திமுக கவுன்சிலர். ஸ்ரீதர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி பெற சமூக விலகலை பின்பற்றாமல் நின்றிருந்தனர்.
இதனால் அவர் பொதுமக்களை தனித் தனியாக நிற்க வைத்தார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த சாந்தகுமார் (50) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர் தன் 2 மகன்களுடன் ஸ்ரீதரை அவரது அலுவலகத்திற்கு தேடி சென்று தங்கியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu