முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு
ஆவடி அருகே முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அமைச்சர் நாசர் உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
Thiruvallur News Today -திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரை பகுதியைச் சேர்ந்த டானியா என்ற சிறுமி முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க, பூவிருந்தவல்லி அடுத்து உள்ள தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் சந்தித்து, உடல்நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிசிக்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறுகையில் வீராபுரம் மோரையைச் சேர்ந்த குழந்தை டானியா (வயது 9,) நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இரண்டரை இலட்சம் நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய பேரி ரோமியா சின்றம் (முக சிதைவு நோய்) என்ற ஒரு நோயால் தாக்கப்பட்டு, இந்த நோய் குறித்து யாரும் எனக்கு உதவி செய்ய வரவில்லை. பள்ளியிலும் முன்னுரிமை தரப்படவில்லை. புறம் தள்ளி வைக்கிறார்கள். சாலையில் ஓடி விளையாட முடியவில்லை. அக்கம், பக்கம் வீட்டில் உள்ளவர்களிடம் கூட பேச முடியவில்லை என்று அவரது வாட்ஸ்அப் மூலம் செய்தியை பரப்பினார்.
அந்த வாட்ஸ்அப் செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிந்து, கடவுளாக இருந்து அந்த பிள்ளையின் நிலை குறித்து கேட்டறிந்து, உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க செய்து, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அவருக்கு ஒட்டுமொத்த பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றுமுன் டெல்லியில் இருந்தபோது தமிழ்நாடு முதலமைச்சர் அ பிரதமரையும், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியையும் சந்திப்பதற்காக சென்றிருந்தார். இருந்தாலும் இங்கு நடைபெற்ற விளிம்பின் நுனியில் உள்ள ஒரு சின்ன பிள்ளை டானியாவின் கூக்குரல் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடைத்தவுடன் அங்கிருந்தே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மருத்துவமனையில் சேர்க்க செய்தார். அதனப்படையில் அனைத்து முதலுதவியும் டானியாவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சிறுமி டானியாவிற்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. . அதற்காக மருத்துவ குழுக்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பால்வளத்துறை அமைச்சரான என்னையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினரையும் நேரடியாக சென்று ஆய்வு செய்ய சொல்லி, அதன் தகவலை தெரிவிக்கவும், அதுமட்டுமின்றி, என்ன நடக்கிறது என்பதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் செய்தியை எனக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் அந்த குழந்தையை பார்வையிட்டு, சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தோம். இத்தகைய செயல்பாடுகள் மூலம் அந்த குழந்தையும், குழந்தையின் பெற்றோர்களும் நம்பிக்கை பெற்றுள்ளனர். இன்னும்; ஒரு வாரத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். இடையில் ஏற்பட்ட அந்த முக சிதைவு சிகிச்சைக்குப் பின் பழைய நிலைக்கு வருவார். அதுமட்டுமின்றி, அந்த பிள்ளையின் எதிர்கால படிப்பிற்கும், அவர்களின் வாழ்வாதாரம் சிறந்தோங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம், ஒன்றிய நகரச் செயலாளர்கள் அயப்பாக்கம் துரைவீரமணி, ந.கோபால், பூவை ப.சா.கமலேஷ், ஜி.ஆர்.திருமலை, சே.பிரேம் ஆனந்த், நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், உ.வடிவேல், மாவட்ட நிர்வாகிகள் பா.நரேஷ் குமார், ஜெ.மகாதேவன், ஏ.ஜி.ரவி, ஊராட்சி மன்ற தலைவர் மோரை திவாகர், ஒன்றிய கவுன்சிலர் இரா.வினோத், நிர்வாகிகள் எம்.முத்துதமிழ்செல்வன், பா.கந்தன், எஸ்.அசோக்குமார், பிரகாஷ், ஏ.ஆர்.பாஸ்கர், ஜனார்த்தனன், எம்.குணசேகரன், ஜெ.சுகுமாரன், பி.எல்.ஆர்.யோகா, மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu