ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை

ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் சரவணன்

ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிவகங்கை மாவட்டம் சங்கரன் கோவில் சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் சரவணன். இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பூம்பொழில் நகரில் நேரு தெருவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற பெண்ணோடு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது இவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலரான சரவணன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஆன்லைனில் சூதாடி அதிக அளவில் பணம் தொலைத்த வேதனையில் இருந்த சரவணன், பணியில் இருக்கும் பொழுது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போலீசார் இறந்துபோன சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சூதாட்டத்தில் பணம் தொலைத்த வேதனையில் தன் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் வெறும் அதிர்ச்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது