திருநின்றவூரில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்

திருநின்றவூரில்  இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்
X

பழுதடைந்த நிலையில் இருக்கும் அங்கன்வாடி பள்ளி கட்டிடம்

திருநின்றவூரில் உள்ள இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீர் செய்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி அலுவலகம் அருகே கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேல் குழந்தைகள் அங்காடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 65.க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர் .

அங்கன்வாடி மையத்தில் தினமும் காலை 10 மணி முதல் 2 மணி வரை செயல்பட்டு வருகிறது இந்த அங்கன்வாடி மையத்தில் தற்போது உள்புறம் உள்ள சுவர் மேல் உள்ள காங்க்ரீட் பெயர்ந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது .

அதேபோன்று கழிவறை மற்றும் சுற்று வட்ட சுவர்கள் அதிக பாதிப்படைந்துள்ளது எனவே குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே கடந்த வாரம் தென் மாவட்டம் பகுதியில் சுவர் உடைந்து பள்ளி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இருந்தது.

இது போன்று மீண்டும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கஇந்த அங்கன்வாடி மையத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு தீர்வு காணவில்லை என்றால் அப்பகுதி மக்களை ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!