பாட்டு பாடி கலாய்த்து பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா

பாட்டு பாடி கலாய்த்து பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா
X
திமுக தேர்தல் பிரசார பாடலான ஸ்டாலின் தான் வராரு என்ற பாடலை கிண்டலடித்து ஸ்டாலின் தான் வராரு.. தமிழக மக்களே உஷாரு என்று விந்தியா பாடினார்.

ஆடிமாத விளம்பரம் போல் ஆட்சியைப் பிடிப்போம் என ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலினை பாட்டு பாடி கலாய்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை விந்தியா.

ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் போட்டியிடுகிறார். ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி உட்பட்ட பகுதியில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அதிமுக தேர்தல் அறிக்கையில் 6 சிலிண்டர்கள், இலவச ஸ்கூட்டர், வாஷிங்மெஷின் ஆகியவற்றை வாகனத்தில் காட்சிப்படுத்தி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகை விந்தியா, அமைச்சர் பாண்டியராஜனை ஆதரித்து திருவேற்காட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் ஆடிமாத துணிக்கடையில் விளம்பரம் கொடுப்பது போல் இன்னும் நான்கு மாதத்தில், நான்கு நாட்களில் ஆட்சியை பிடிப்போம் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஆட்சிக்கு வந்தது போல் என்று குறிப்பிட்ட அவர்,

அப்போது திமுக தேர்தல் பிரசார பாடலான ஸ்டாலின் தான் வராரு என்ற பாடலை கிண்டலடித்து விந்தியா பாடியதாவது,

ஸ்டாலின் தான் வராரு.. தமிழக மக்களே உஷாரு

திமுக ஆட்சிக்கு வந்தா பேஜாரு..

என்று ஸ்டாலின் தான் வாராரு என்ற பாடலை விந்தியா தனது பாணியில் மாற்றி திமுக மீதான அதிமுகவின் விமர்சனங்களை பாடலாக பாடினார். ஸ்டாலினை கலாய்த்தபடி பாட்டு பாடியதை கூடி இருந்த அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் வெகுவாக ரசித்தனர். இப்படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story