முக கவசம் அணியாததால் திருமண வீட்டில் 5 ஆயிரம் அபராதம்
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்றைய தினம் திருமணத்திற்காக பதிவு செய்தவர்கள் தங்களது உறவினர்கள் 50 பேர் கலந்து கொண்டு நடத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், அங்கு யாரும் முக கவசம் அணியாமல் இருப்பதாக வந்த தகவலையடுத்து திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதார துறை ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு செய்த போது முகக்கவசம் அணியாமல் இருப்பது தெரியவந்தது.
மேலும் அதிகாரிகளை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் அவசர, அவசரமாக முக கவசத்தை எடுத்து மாட்டிக் கொண்டிருந்தனர். இதையடுத்து திருமண வீட்டார் மீது ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் நகராட்சி முழுவதும் முக கவசம் அனியாமல் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu