உல்லாசத்தில் வாலிபரிடம் 15 சவரன் 'அபேஸ்'; ஆவடியில் இருவர் கைது

உல்லாசத்தில் வாலிபரிடம் 15 சவரன் அபேஸ்;  ஆவடியில் இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட அஜித், சரவணன்.

ஆவடியில் உல்லாசத்திற்கு அழைத்து, வாலிபரிடம் 15 சவரன் நகைகளை பறித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, அடையாறு, சாஸ்திரி நகர், 7வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (39) நியூஸ் பேப்பர் ஏஜென்ட். இவர், கடந்த 5மாதத்துக்கு முன்பு எழும்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, ஆவடி பகுதியை சேர்ந்த பெர்சோனா (23) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலமாக தொடர்பில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 28ந் தேதி பெர்சோனா செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு, எனது கணவர் வீட்டில் இல்லை. நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் என அழைத்துள்ளார். இதனையடுத்து, செந்தில்குமார் தனது காரில் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து, அவர் வீட்டுக்குள் சென்றபோது, அங்கு இளம்பெண் உள்பட 4பேர் இருந்துள்ளனர். பின்னர், அவர்கள் செந்தில்குமாரை மிரட்டி, அவரது போனில் உள்ள கூகுள் பே மூலமாக ரூ.13ஆயிரம் பணத்தை மற்றொரு வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்துள்ளனர்.

மேலும், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலிகள், பிரேஸ்லெட், மோதிரம் உட்பட 15சவரன் நகைகள் மற்றும் 2செல்போன் ஆகியவை பறித்துள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் செந்தில்குமார் கண்ணை கட்டி, அவரது காரில் ஏற்றி மதுரவாயல் பைபாஸ் சாலையில் விட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கு வந்த 2மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.

செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, ஆவடி, காந்தி நகர், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த சரவணன் (25), பட்டாபிராம், லெட்சுமி நகர், முல்லை தெருவை சேர்ந்த அஜித்(24) ஆகிய இருவரை போலீசார் இன்று மாலை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கணவன், மனைவியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு