ஆவடி தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்ற முயற்சி: தொழிலாளிகள் போராட்டம்

ஆவடி தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக  மாற்ற முயற்சி: தொழிலாளிகள் போராட்டம்
X

ஆவடியில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் திட்டத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

ஆவடியில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் திட்டத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

நாடு முழுவதும் உள்ள 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷனாக மாற்றும் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்சியாக சென்னை ஆவடியில் உள்ள ஓ.சி.எப் அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டு போரட்ட குழுவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென மோடியின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து பேசிய அகில இந்திய பாதுகாப்பு தொழிலாளர் சம்மேளன தேசிய பொது செயலாளர் ஶ்ரீ குமார், பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக கூறினார். இதுதொடர்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு எந்த பயனும் இல்லை என கூறிய அவர் விரைவில் காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு