திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கல்

திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கல்
X

விபத்தில் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்தது.

திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நடந்தது. இதில், கடந்த 2014 ல் ஏற்பட்ட விபத்தில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால் செயலிழந்து,வாய்பேச முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டார். அவருக்கு, 47 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்றத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன், பாதிக்கப்பட்ட அரவிந்த் என்ற வாலிபருக்கு இழப்பீட்டுக்கு தொகைக்கான காசோலை வழங்கினார். நிகழ்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா