உறுதி...! பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா! இனி என்ன நடக்கப்போகுதோ!
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இனி டிஆர்பிக்கு மட்டுமின்றி இணையவாசிகளுக்கும் பஞ்சமிருக்காது. டிவிட்டர் முதல் பேஸ்புக் வரை அனைத்து இணையதளங்களும் இனி பிஸி.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர் யூகங்கள் அவ்வப்போது வெளியவந்தவண்ணம் இருக்கிறது. அதில் கிட்டத்தட்ட உறுதியான பெயர் ஐஸ்வர்யா.
இந்த சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கிறார் ஐஸ்வர்யா. இவர் பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய ஆறு படத்தில் பிரச்சார பீரங்கி சவுண்டு சரோஜாவாக கலக்கியவர். அவர் உள்ளே வந்தா பிக்பாஸ் வீடு அலறும் என்கிறார்கள். ஆனால் அவருக்கும் பலர் அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் உஷாராவே இருங்க. உங்களையே அழ விடக் கூடிய போட்டியாளர்களும் வருவாங்க. அப்படி ஆள் பாத்து எடுத்து போடுறதுல பிக்பாஸ் கில்லாடி. கவனமா இருங்க என அறிவுரை வழங்கி வருகின்றனர் ரசிகர்கள்.
விஜய் சேதுபதிக்கும் மக்கள் தொடர்ந்து தங்களது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு அறிவுரை மழை பொழிந்து வருகிறது. போட்டியாளற்களிடம் உஷாரா இருங்க சேதுன்னா. போட்டியாளர்களை விட தொகுப்பாளரை கிண்டல் செய்ய நிறைய பேரு இருக்காங்க என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu