திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை

திருப்பூரில்  பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை
X

பைல் படம்.

திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.

திருப்பூரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை 81, இறப்பு எண்ணிக்கை 2ஆகவும் இருந்தது. இந்நிலையில் திருப்பூரில் அரசுபள்ளி பிளஸ்-2 மாணவர்கள் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் பேரில் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!