முழு கொள்ளளவை எட்டிய நம்பியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

முழு கொள்ளளவை எட்டிய நம்பியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி
X
நம்பியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் திசையன்விளை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகாக்குட்பட்ட கோட்டைக்கருங்குளத்தில் அமைந்துள்ள நம்பியாறு அணையின் நீர்மட்டம் 23 அடி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் திசையன்விளை தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நம்பி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனையடுத்து கோட்டைக்கருங்குளத்தில் கிராமத்தில் அமைந்துள்ள நம்பியாறு அணை நீர்மட்டம் தனது முழுக்கொள்ளளவான 23 அடியை எட்டியது. இதனையடுத்து திசையன்விளை தாலுகாவில் உள்ள குளங்களுக்கு வலது மற்றும் இடது கால்வாயில் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் உள்ள இடது பக்க பிரதான கால்வாய் மற்றும் வலது பக்க பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கால்வாய்களின் மூலம் 44 குளங்கள் வழியாக 368.64 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Tags

Next Story
ai in future agriculture