நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

நெல்லை மட்டும் தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்புக்காக இன்று பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
செயற்பொறியாளர் நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10/33-11KV பழைய பேட்டை மற்றும் 33/11 KV பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் இன்று 05.11.2024 செவ்வாய் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால், கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர் ,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை ,தொழிற்பேட்டை, பாட்ட பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம் ,சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத்துறை ,கருப்பன் துறை ,டவுன் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட்,A.P. மாடத் தெரு ,சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார் குளம், மார்க்கெட் ,வ உ சி தெரு வையாபுரி நகர் ,பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் ,தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதேபோல் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சீதபற்பநல்லூர் உப மின் நிலையத்தில் 05/11/ 2024 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
புதூர், சீதபற்பநல்லூர்,உகந்தான்பட்டி,சுப்பிரமணியபுரம்,சமத்துவபுரம்,சிறுக்கன்குறிச்சி,காங்கேயன் குளம், வல்லவன் கோட்டை,வெள்ளாளங் குளம்,முத்தன் குளம்,மாறாந்தை,கல்லத்திகுளம்,நாலான்குறிச்சி,கீழகரும்புளியூத்து.
அதேபோல் கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 110/11KV கி.வோ வீ.கே.புரம் மற்றும் 33/11KV கி.வோ ஆழ்வர்க்குறிச்சி துணைமின் நிலையங்களில் வருகின்ற 05.11.2024 செவ்வாய் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காரையார், சேர்வலார், பாபநாசம் வீ.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிலைபட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்க்குறிச்சி, கறுத்தபிள்ளையூர், A.P நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பங்குளம், செல்லபிள்ளையர்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu