தேனி : மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

தேனி : மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
X

சின்னமனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மருத்துவ முகாம்

தேனி : சின்னமனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், மருத்துவ முகாமும் நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்னமனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், மருத்துவ முகாமும் நடைபெற்றது.

சின்னமனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெயம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம், தேனீக்கள் அறக்கட்டளை, சின்னமனூர் ஜே.சி.ஐ, சிகரம் அமைப்பும் இணைந்து மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், தடுப்பூசி முகாமும் நடைபெற்றது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ,மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேனி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, காய்கறி வகைகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நல்லி மெட்ரிக் பள்ளி தாளாளர் ராமர் மற்றும் மாவட்ட அளவிலான மாற்றுதிறனாளிகள் சுமார் 100 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா