தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் பயங்கர தீ, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் பயங்கர தீ,  2 மணி நேரம்  போராடி தீயை அணைத்தனர்
X
தஞ்சாவூர் அருகே அரயபுரத்தில் தரிசு நிலத்தில் திடீர், தீ
தஞ்சாவூர் அருகே அரயபுரம் பகுதியில் தரிசு நிலத்தில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தஞ்சாவூர் அடுத்த அரயபுரம் பகுதியிலுள்ள தரிசு நிலம் வயல்வெளியில் இன்று இரவு 8.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு நாணல் செடிகொடிகள், கருவேல மரங்கள் அதிகமாக இருந்ததால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

மேலும் பலத்த காற்றில் தீ வேகமாகப் பரவியது. உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருவையாறு மற்றும் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்ட இடம் குறுகிய சாலையாக இருந்ததால், அப்பகுதியில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் மோட்டர் சைக்கிளில் அங்கு விரைந்து சென்று அரயபுரம், வங்காரம்பேட்டை, ராஜகிரி ஆகிய கிராம மக்கள் ஒத்துழைப்போடு

அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் 3 மின்மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் குழாய் இணைத்து, கொழுந்துவிட்டு எரிந்த தீயை 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.

இதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!