பழமை வாய்ந்த மரங்களை வெட்டிய நெடுஞ்சாலைத்துறை: முன்னாள் எம்எல்ஏ தடுத்து நிறுத்தம்
நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டிய அகற்றிய பழமைவாய்ந்த மரம்.
தென்காசி மாவட்டம், கடையம் யூனியன் அலுவலகத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. இவகைளை கேரளாவுக்கு அளவுக்கதிகமாக மற்றும் உயரமான கனரக வாகனங்களில் கல் மணல் கொண்டு செல்ல இடையூறாக இருக்கிறது என நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி வருகின்றனர்.
தென்காசி ஆர்டிஓ விடம் அனுமதி பெற்றுதான் வெட்டி வருகிறோம் என்று கூறுகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன், என்ன அனுமதி பெற்று மரத்தை வெட்டுகிறார்கள் என்று மரம் வெட்டுபவர்களை தடுத்து நிறுத்தினார்.
மேலும் இதுபோன்று கல் மணல் கொண்டு செல்லும் வாகனங்களால் சாலையும் பழுது படுகிறது. மரங்களையும் வெட்டினால் தொடர்ந்து பசுமை இயக்கங்களையும் சமூக ஆர்வலர்களையும் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் கடையத்தில் நடத்தப்படும் என்று முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu