தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி விபத்து

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி விபத்து
X

பட விளக்கம்: புளியரை அடுத்துள்ள S வளைவில் வாகனம் விபத்துக்குள்ளான போது எடுத்த படம்

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென விபத்துக்குள்ளானது.

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு வைக்கோல் லோடு ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கு செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாட்டில் இருந்து கால்நடைகளுக்கு வைக்கோல்களை புளியரை வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அவ்வாறு செல்லும் வாகனங்கள் அளவுக்கு அதிகமாகவும், அபாயகரமாகவும் மற்றும் பின்னால் வரும் வாகனங்கள் சைடு கண்ணாடி வழியாக பார்த்து இயக்க முடியாத அளவிற்கு பாரத்தை ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் ஓட்டுனருக்கும் வாகனத்தின் முன்னே மற்றும் பின்னே வரும் வாகனத்திற்கு ஆபத்து மற்றும் விபத்துக்குள்ளாவதுடன் போக்குவரத்திற்கு நீண்ட நேரம் இடையூறு ஏற்படுவதால் இனிவரும் காலங்களில் அளவான பாரம் ஏற்றி சைடு கண்ணாடி தெரியும்படி வைக்கோல் லோடு ஏற்றி வர அறிவுறுத்தப்படுகிறது.

இதனை மீறும் வாகனங்களை அபராதம் விதிப்பதோடு வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது . இந்த சூழலில் புளியரை அடுத்த எஸ் வளைவில் அதிகம் பாரத்தை ஏற்றி சென்ற வானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் இதுபோன்று அதிக பாரத்தை ஏற்று செல்லும் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று காவல் ஆய்வாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!