கீரனூர் அருகே பழங்குடியினர் மக்கள் 150 பேருக்கு சிங்கப்பூர் நண்பர்கள் நிவாரண தொகுப்பு வழங்கினர்

கீரனூர் அருகே பழங்குடியினர் மக்கள் 150 பேருக்கு  சிங்கப்பூர் நண்பர்கள்  நிவாரண தொகுப்பு வழங்கினர்
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அண்ணாநகரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 150 குடுபத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தொகுப்பை போலீஸ் டிஎஸ்பி சிவசுப்ரமணியன் சிங்கப்பூர் நண்பர்கள் சார்பில் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அணணாநகரில் பழங்குடியினர் மக்கள் 150 பேருக்கு அரிசி, பருப்பு காய்கறிகள் அடங்கி தொகுப்பை சிங்கப்பூர் நண்பர்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூரை அடுத்த அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் 150 நரிக்குறவர்கள் எனப்படும் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு சிங்கப்பூர் நண்பர்கள் மற்றும் தாஜ்மஹால் புட் ஹவுஸ் சார்பில் கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியம் தலைமையில் 150 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பை வழங்கினர்

மேலும்,கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil