மோர்பாளையத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி மாவட்ட அளவிலான செஸ் போட்டி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஜே.பி. ஆனந்த் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி, பிப்ரவரி 26 ஆம் தேதி, மோர்பாளையம் விநாயகா மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிக்கு முதன்மை நடுவராக, நாமக்கல்லை சேர்ந்த பீடே செஸ் நடுவர் முத்துகுமாரசாமி பணியாற்றுகிறார்.
போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இறுதியில் மூத்தோர் பிரிவில் வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1,500-ம், இரண்டாம் பரிசாக ரூ. 1,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 800-ம், நான்காம் பரிசாக ரூ. 700-ம், ஐந்தாம் பரிசாக ரூ. 600-ம் என மொத்தம் 20 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும், சிறுவர் - சிறுமியர் பிரிவில் வெற்றி பெறும் முதல் 10 வீரர்களுக்கு, கோப்பைகளும் மற்றும் பங்குபெறும் அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்களும் வழங்கப்படுகிறது.
இதேபோல், மூன்று சிறந்த பள்ளி அல்லது சங்கங்களுக்கு சிறப்பு பரிசுகளாக, 3 பரிசுக் கோப்பைகள் வழங்கப்படுகிறது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகையின் மதிப்பு ரூ. 38 ஆயிரம் ஆகும். போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகள் லீக் முறையில், தனித்தனியே பிரிவு வாரியாக 6 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
இந்த செஸ் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள், தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9865883233 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆனந்த் செஸ் அகாடமி செயலாளர் ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu