/* */

கொல்லிமலையில் மலைவாழ்மக்களுக்கு ஜாதி சான்று: சப் கலெக்டர் நேரடி விசாரணை

கொல்லிமலையில் மலையாளி ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள மலைவாழ் மக்களிடம் சப் கலெக்டர் நேரில் விசாரணை நடத்தினார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் மலைவாழ்மக்களுக்கு  ஜாதி சான்று: சப் கலெக்டர் நேரடி விசாரணை
X

கொல்லிமலையில் மலையாளி ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள மலைவாழ் மக்களிடம் சப் கலெக்டர் நேரில் விசாரனை நடத்தினார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தின்னனூர் நாடு பஞ்சாயத்தை சேர்ந்த ஏராளமான மலைவாழ் மக்கள் மலையாளி ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் மீதான விசாரணை முகாம் வாசலூர்ப்பட்டி அரசு பள்ளியில் நடைபெற்றது.

நாமக்கல் சப்கலெக்டர் கோட்டைக்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். அப்போது இந்து, மலையாளி ஜாதி சான்றிதழ் பெற அரசு கேட்டுள்ள 14 வகையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து ஆய்வு செய்தார்.

பின்னர், முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள மலைவாழ் மக்களிடம் விசாரணை நடத்தினார். கொல்லிமலை பகுதியில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் 164 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

கொல்லிமலை தாசில்தார் ராஜ்குமார், டாக்டர் புஷ்பராஜன், பஞ்சாயத்து தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Jun 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை