கொல்லிமலையில் உல்லாசத்திற்கு மறுத்த காதலி கொலை: இளைஞர் கைது

கொல்லிமலையில் உல்லாசத்திற்கு மறுத்த காதலி கொலை: இளைஞர் கைது
X

பைல் படம்.

கொல்லிமலையில் உல்லாசத்திற்கு மறுத்த காதலியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லிமலை ஒன்றியம், பரவாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களது மகள் ரேணுகா (21). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி பங்காருவின், விவசாய தோட்டத்தின் அருகே புதர் பகுதியில், மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எலும்புக்கூடாக கிடந்தது காணாமல் போன ரேணுகா என்பது தெரியவந்தது.

எலும்புக்கூட்டை மீட்ட போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேணுகாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதே ஊரைச் சேர்ந்த பிடாரன் மகன் ரஜினி (23) மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதையத் தொடர்ந்து, போலீசார் ரஜினியிடம் தீவிரமாக துருவி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ரேணுகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும், ரேணுகாவும் காதலித்து வந்தோம். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை கேட்டேன். அவரும் அதை கொடுத்தார். சில மாதங்கள் கழித்து நான், ரேணுகாவுக்கு சித்தப்பா முறை என்பது தெரியவந்தது. இதையடுத்து ரேணுகா என்னுடன் பழகுவதை தவிர்த்துவிட்டார். பின்னர் 5 பவுன் நகையை திருப்பி கேட்டார்.

சம்பவத்தன்று விவசாய தோட்டத்தில் நானும், ரேணுகாவும் சந்தித்தோம். அப்போது அவரை நான் உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்ததுடன், 5 பவுன் நகையைக் கேட்டு நச்சரித்தார். இதனால் ஆத்திரத்தில் அவரது தலையை பிடித்து அங்கிருந்த பாறையில் அடித்துக்கொலை செய்தேன். பின்னர் உடலை புதர் பக்கம் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன் என்று வாக்கு மூலத்தில் தெரிவித்தார். இதையொட்டி போலீசார் ரஜினியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!