கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் மாணவியர் சேர்க்கை: சி.இ.ஓ. தகவல்
பைல் படம்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகள் மற்றும் கல்வி கற்க இயலாத சூழலில் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) 3 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சேரும் மாணவியருக்கு, ஹாஸ்டல், தனித்தனிக்கட்டில், மின்சார வசதி, நோட்டு புத்தகம், மருத்துவ வசதி, மாலை நேரத்தில் தையல் பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள், தங்கள் பகுதியில், நான்காம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் அல்லது பள்ளி படிப்பை இடைநின்ற ஆதரவற்ற பெண் குழந்தைகள், ஏழ்மை சூழலில் உள்ள பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களை இந்த கையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 98943 56853 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu