கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
X

பைல் படம்.

கொல்லிமலைப் பகுதியில் லைசென்ஸ் இல்லாத 10 நாட்டுத் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ளவர்கள், மலைப் பகுதிகளில் வேட்டையாட லைசென்ஸ் பெறாமல், சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அவற்றை தடுக்கும் வகையில் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என பொதுமக்களிடம் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கூடுதல் எஸ்.பி., மணிமாறன், டி.எஸ்.பி.,க்கள் சங்கர், சுரேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனடிப்படையில், இதுவரை 112 லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைக்கப் பட்டன. தற்போது, மேலும் 10 நாட்டு துப்பாக்கிகள் லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தவர்கள் வாழ வந்திநாடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil