ப.வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

ப.வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட முத்துராஜ்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீசார் திருட்டு வழக்கில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துராஜ் (28) என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துராஜ், ஏற்கனவே, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சக்ரா நகரில் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, சக்ராநகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் உருவமும், ஒட்டன்சத்திரம் போலீசாரிடம் சிக்கிய முத்துராஜ் உருவமும் ஒரேபோல் இருந்தது. உடனே பரமத்திவேலூர் போலீசார், ஒட்டன்சத்திரம் போலீசார் உதவியுடன் முத்துராஜிடம் இருந்து 15 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!