சோழசிராமணி பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

சோழசிராமணி பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
X

பைல் படம்

சோழசிராமணி பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோழசிராமணி பகுதியில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, சோழசிராமணி துணை மின் நிலையத்தில் நாளை 12ம் தேதி வெள்ளிக்கிழமை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இதையொட்டி, சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு மற்றும் சோழசிரமணி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெரும் பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு