கபிலர்மலையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருரத்தரங்கம்

கபிலர்மலையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருரத்தரங்கம்
X

கபிலர்மலையில் நடைபெற்ற தொழுநோய் கருத்தரங்கில், மாவட்ட தொழுநோய் மருத்துவப் பிரிவு இணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தினி விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டார்.

கபிலர்மலையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கபிலர்மலையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.வேர்டு நிறுவன செயலாளர் சிவகாமவல்லி வரவேற்றார். தொழு நோய் பிரிவு இணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தினி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தொழுநோய் விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டுப் பேசினார். அப்போது, மனிதர்களுக்கு ஏற்படும் தொழுநோய் என்பது என்ன, அது எப்படி பரவுகிறது. அதற்தற்கான அறிகுறிகள் என்ன, இந்த நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அரசால் வழங்கப்படும் உதவிகள் குறித்து விளக்கிப் பேசினார்.

கபிலர்மலை பஞ்சாயத்து தலைவர் வடிவேலு முன்னிலை வகித்தார். என்எம்எஸ் அலுவலர்கள் முருகேசன், திருநாவுக்கரசு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவனேசன் ஆகியோர் முற்றிலும் தொழுநோயை குணப்படுத்தக்கூடிய கூட்டு மருந்து சிகிச்சை குறித்தும், தொழு நோயாளிகள் உண்ண வேண்டிய ஊட்டச்சத்து குறித்தும் பேசினார்கள். 15 நாள் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகாண்டனர். அனைவருக்குமம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முடிவில் வேர்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்